எதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு பல பெற்றோருக்கு புரிவதேயில்லை. சொன்னாலும் தங்கள் குழந்தைகளை விட மோசமாக அடம் பிடிப்பார்கள் .
குழந்தைகள் சின்ன விழுகை விழுந்துவிட்டால் போதும் எக்ஸ்ரே சிடி ஸ்கான் எடுங்கள் என நட்டுப் பிடிப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திற்கும் தேவையற்ற பரிசோதனைகள் வேண்டும் என வேண்டுவோர் பலராகும்.
இவ்வாறான சிடி ஸ்கான் பரிசோதனைகள் அவசியமானவையா? ஆபத்தானவையா?
சிடி ஸ்கான் எடுப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் ஒரு ஆய்வு கூறுகிறது. JAMA Pediatrics. என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வுத் தகவல் இது. இது முன்பு தெரியத தகவல் அல்ல. ஆனாலும் இப்பொழுது தரப்படும் தரவுகள் பயமுறுத்துக்கின்றன.
ஒவ்வொரு 10000 வயிற்றறை ஸ்கான்கள் எடுத்ததன் காரணத்தால் ஆண்குழந்தைகளில் 14 மும் பெண் குழந்தைகளில் 30 மும் கட்டிகள் வளரும் என ஆய்வுகளின் தரவின் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள்.