முன்னைய காலங்களில் உணவுடன் நீர்தான் அருந்துவார்கள். ஆனால் இப்பொழுது கூடவே மென்பானம் பலருக்கும் தேவைப்படுகிறது. கோக்கோ கோலா, பன்ரா, கிரீம் சோடா எனப் பல. போதாக்குறைக்கு இப்பொழுது Energy drinks ம் சேர்ந்துவிட்டன.
அந் நாட்களில் காய்ச்சல் வந்தால் ஒரு ஒரேஜ் பார்லி, வயிறுப் பொருமல் என்றால் ஒரு ஜின்ஜபியர் என ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் என எப்பொழுதாவதுதான் மென்பானம் அருந்துவார்கள். இப்பொழுது இனிப்பு பானங்களின் பாவனை அதீதமாக அதிகரித்திருப்பதை அறிவீர்கள். முன்பு Dinner என வெளியே சாப்பிடப் போனால் சூப் எடுப்பார்கள். இப்போ மென்பானங்கள்தான். மற்றைய பானங்கள் (மது) பற்றி இதில் நான் பேசவில்லை.
இவற்றை அருந்துவதால் 2010 ல் இல், உலகளாவிய ரீதியில் 180,000 மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது,
அவற்றில்…
- நீரிழிவு இருந்து 132.000 பேரும், (சுமார் 75%)
- இருதய நோய்களிலிருந்து (CVD) 44.000 மரணங்களும், மற்றும்
- புற்றுநோய் காரணமாக 6000 இறப்புகளும் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
இனிப்புப் பானங்களில் கலோரிப் பெறுமானம் அதிகம் உள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிக்கிறது, அதனால் உடற் திணிவுக் குறியீடு (BMI) அதிகரிக்கிறது.