மாணவர்களும், தொழுகையும்

0
288
தொழுகை, ஒவ்வொரு முஸ்லிமின் இரண்டாவது கடமை.  மறுமையில் முதல் விசாரணை தொழுகை குறித்தே கேட்கப்படுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடமை.

தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மட்டுமே குர் ஆனில் 31 இடங்களில் வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை இறைவனருளால் நம்மில் பலர் கைக்கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நம் பிள்ளைகளிடம் இதை முறையாக நிலைநிறுத்துகிறோமா?
 பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாகிய நம் பிள்ளைகள் தொழுகையின்மீது சற்று அசிரத்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்குப் பல காரணங்களைக் கூறிக்கொள்கிறோம்: பள்ளிகளில் இடவசதியில்லை; நேரம் கிடைப்பதில்லை; அனுமதிப்பதில்லை; என்று பல சமாதானங்களைக் கூறிக்கொள்கிறோம். 

 உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்.
 மேலேயுள்ள ஹதீஸில், பத்து வயதாகிவிட்டால் அடித்தேனும் தொழவையுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, சிறார்களுக்கும் தொழுகை எத்துணை அவசியமானது என்று புரிந்துகொள்ளலாம்.