அமைதியான இரவு..
அந்த இரவு அமைதியை தொந்தரவு செய்யதபடி ஒரு இனிமையான மென்மையான ஆண் குரலில்..
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.. சூரியன் எஃப்.எம்..
நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் இருந்து.. பீ.பி.ஸ்ரீநிவாஸ் தேன் குரலில்.. நீங்கள் கேட்கவிருக்கும் பாடல்.. என்ற அறிவிப்பினை தொடர்ந்து..
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..
தெய்வம் ஏதுமில்லை..
நடப்பதையே நினைத்திருந்தால்..
துன்பம் ஏதுமில்லை..
என்ற பாடல் மென்மையாக துவங்கியது..
நான் கட்டிலில் கொஞ்சம் சாய்ந்தபடி உட்கார்ந்த பொஷிஷனில் படுத்தும் படுக்காமலும் தலையனையில் ஒருபக்கம் ஊனி படுத்திருந்தேன்..
வெள்ளை கை வைத்த பணியன்.. வெள்ளை வேட்டி.. (அப்படியே நம்ம மனோபாலாவை நினைத்துக் கொள்ளுங்கள்..)
என் எதிரில் இருந்த டீபாயில் இருந்த தட்டில் இருந்த சிப்ஸ்ஸை எடுத்து மெல்ல மெல்ல மென்றேன்..
சிக்கன் 65 பீஸ்.. போன்லஸ்..
அதிலும் ஒரு சின்ன சின்ன துண்டை எடுத்து கடித்துக் கொண்டேன்..
ஆஹா அருமையான பாடல்.. அருமையான சையிடு டிஸ்..
என் வலது கையில் கண்ணாடி டம்ளரில்.. சரக்கு.. பாரீன் சரக்கு..
கொஞ்சம் ஒரு சிப்.. கொஞ்சம் சிக்கன் பீஸ்..