நினைவெல்லாம் நித்யா

0
96

என் பெயர் ரவி.. எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவ மனையில் எம்.டி க்கான பயிற்சிக் காலத்தில் இருந்தேன். என்னைப் போல இன்னும் 5 பேர் இங்குப் பொது மருத்துவத் துறையில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களில் 4 பேர் பகலிலும் 2 பேர் இரவிலும் பணியிலிருப்போம். இரவில் ஐ.சி.சி.யு விற்கு 1 மணி நேரத்திற்கு 1 முறை சென்றுப் பார்க்க வேண்டும். மற்றபடி நர்ஸ்கள் அன்றாட நடவடிக்கைகளைக் கவணித்துக் கொள்வார்கள். நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்போம். எங்களுக்கு இரவுப் பணியின் போது ஓய்விற்காக ஒதுக்கப் பட்ட அறையில் 2 தனித் தனி கட்டிலும் 1 மேசை 2 நாற்காலிகள் இருக்கும். ஒரு சின்ன குளிர் பதனப் பெட்டி உள்ளது. ஏ.சி வசதியும் உண்டு.

எங்கள் பிரிவில் 6 பேரில் 2 பெண்கள்.. இரவுப் பணி சுழற்சி முறையில் வருவதால் சில சமயத்தில் எங்களில் ஒரு ஆனும் ஒரு பெண் மருத்துவரும் பணியில் இருப்போம். ஆண் பெண் வித்தியாசம் எங்கள் தொழிலில் குறைந்து விட்டதாலும் இரவு முழுதுமே படித்துக் கொண்டிருப்பதாலும் இது ஒரு பெரிய விசயமாகப் பட்டதில்லை.

எங்களில் நானும் நித்யாவும் நல்ல நெருங்கிய நன்பர்கள். பெரும்பாலும் மருத்துவமனையிலும் நூலகத்திலும் சேர்ந்தே இருப்போம். நாங்கள் படித்ததும் ஒரே பள்ளி. எம்.பி.பி.எஸ் மட்டும் நான் சென்னையிலும் அவள் கோவையிலும் படித்தோம். எம்.டி க்கான பயிற்சிக் காலத்தில் மீண்டும் இருவரும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர அந்தஸ்துடைய மருத்துவ மனையில் சேர்ந்ததும் இருவருமே சந்தோசப் பட்டோம்.. அதிலிருந்தே இருவரும் நெருங்கிய நன்பர்கள் ஆனோம்.