அதே போல் சச்சு அக்காவும்,சாந்தியும் வயது வித்தியாதம் இருந்தாலும் நெருங்கிய தோழிகள். சச்சு அக்கா வீட்டில் தான் சாந்தி எப்போதும் பொழுதை போக்கிக் கொண்டு இருப்பாள். சச்சு எனக்கு அக்கா என்றாலும் திருமணம் ஆகி சுமார் 4 வயது மூத்தவள். தூரத்து உறவில் அக்கா முறை என்பதால் அவளை அன்போடு அக்கா என்றே அழைப்பேன். அதே போல் சாந்தி கொஞ்சம் நெருங்கிய உறவு ஆனால் எனக்கு அவள் தங்கை முறை.
சச்சு அக்கா என் வீட்டிற்கு எதிர் வீடு என்பதால் நான் பெரும்பாலும் அங்கே போகும் போது சாந்தியும் அங்கே இருப்பாள். அப்போது தான் அவளை பார்த்து பழகி இருக்கிறேன். தங்கை முறை என்றாலும் சாந்திக்கு என்னை பார்த்தாலே வெட்கம் வந்து முகம் சிவக்கும். நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்து கொண்டு தான் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுவாள். ஆனால் சாந்தி அக்கா தான் அவளிடம் அடிக்கடி கிண்டல்,கேலி செய்து அவள் வெட்கத்தை விட்டு தைரியம் கொடுத்து பேச வைத்தாள்.