என் திருமணத்திற்கு முன்பே என் மாமனார் ஒரு சோதிடர் என்பதால் வீடே ஆட்கள் வருதும் போவதுமாக ரொம்ப பிஸியாக இருக்கும். வீட்டு மாடியில் தான் அவர் சோதிடம் பார்ப்பார். நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டு முழு நேர சோதிடரா மாறினார்.
ஆனால் நான் மருமகளாக வந்த போது மாமனாரிடம், கம்ப்யூட்டர் ஜாதகம், அதில் பதிவு செய்து சுலபமாக பலன்களை பிரிண்ட் செய்து, புது ஜாதகம் தயாரித்து கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்தேன். உடனே அவர் எனக்கு அதலாம் தெரியாது. நீ தான் படிச்சவ. கம்ப்யூட்டரும் தெரியும். அதனால நீயே அதெல்லாம் பண்ணு. நான் மாட்டேனா சொல்ல போறேன். இனிமே நீயும் என் கூடவே இருந்து அதெல்லாம் கவனிச்சுக்கோ. என்றார்.
ஆனால் என் புருஷனுக்கு வேறு யாரும் சமைத்தால் பிடிக்காது என்பதாலும், பிள்ளைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதாலும், மாமனாரின் சோதிட உதவிக்கு ரெண்டு கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் மற்றும் இரண்டு பெண்களை வேலைக்கு போட்டு.